காந்தி, காமராஜர் படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

கீழ்பென்னாத்தூரில் காந்தி, காமராஜர் படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருவண்ணாமலை
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் காந்தி, காமராஜர் படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் மகாத்மாகாந்தி 154 வது பிறந்தநாள்விழா மற்றும் காமராஜர் 48வது நினைவு நாளை முன்னிட்டு நகர காங்கிரஸ் சார்பில் மகாத்மாகாந்தி அவர்களது படங்களுக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், நகர தலைவர் செல்வம் ஆகியோர் மாலையணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர் கராத்தே ராஜா, வட்டார தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், ராமதாஸ், நகர துணைத் தலைவர் பாக்யராஜ், நகர பொருளாளர் இளையராஜா, முன்னாள் நகர தலைவர் ராஜாமணி, கிராம கமிட்டி தலைவர்கள் தேவராஜ், சுப்பிரமணி, கிராம கமிட்டி உறுப்பினர் வேலாயுதம், நிர்வாகிகள் கோவிந்தன், சுப்பிரமணி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






