காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x

பத்மநாபபுரத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி

தக்கலை,

பத்மநாபபுரம் நகராட்சியில் வீட்டு வரி உயர்வை கண்டித்து பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நகர தலைவர் ஹனுகுமார் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் குமாரபுரம் பேரூராட்சி தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜோன்ஸ் இம்மானுவேல் மற்றும் நிர்வாகிகள் புரோடி மில்லர், வின்சென்ட், புஸ்பராணி, தேவி, ஏசுதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story