காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

வாடிப்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மதுரை

வாடிப்பட்டி,

ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பா.ஜ.க. அரசை கண்டித்து வாடிப்பட்டி காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பாக வாடிப்பட்டி பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில தலைவர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.மாவட்ட தலைவர் சோனைமுத்து, வட்டார தலைவர்கள் ஐ.கே.குருநாதன், பழனிவேல், காந்தி, சுப்பாராயல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் துரைமுருகன் நடராஜன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். நகர தலைவர் முருகானந்தம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story