காந்தி சிலையிடம் மனு கொடுத்து காங்கிரசார் நூதன போராட்டம்
காந்தி சிலையிடம் மனு கொடுத்து காங்கிரசார் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
ராகுல்காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீரவநல்லூர் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சிதம்பரம் என்பவர் கருப்பு சட்டை அணிந்து, வாயில் கருப்பு துணி கட்டி, வீரவநல்லூரில் உள்ள மகாத்மா காந்தி சிலையிடம் மனு கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்த போராட்டத்தில் வீரவநல்லூர் பேரூராட்சி துணைத்தலைவர் வசந்தசந்திரா, நகர காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், நகர பொருளாளர் சொரிமுத்து, துணைத்தலைவர் கனகசபாபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர்கள் கீதா, சந்திரா, சேரன்மாதேவி பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் அனி, ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story