முத்துப்பேட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


முத்துப்பேட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

முத்துப்பேட்டையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்

முத்துப்பேட்டை:

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்

இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற பொறுப்பாளர் அன்வர்தீன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சதீஷ்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர்கள் ஜெகபர் அலி, சுந்தரராமன், இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையன், விவசாய பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் மற்றும் பலர் கலந்துகொண்டு அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


Next Story