சிவகாசியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


சிவகாசியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x

சிவகாசியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாடு முழுவதும் அக்னிபத் திட்டத்தை எதிர்த்தும், அதனை வாபஸ் பெற கோரியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சிவகாசி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் சார்பில் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி சேர்மத்துரை முன்னிலை வகித்தார். நகர தலைவர் குமரன் வரவேற்றார். இதில் வட்டார தலைவர்கள் ஜீ.பி.முருகன், பைபாஸ் வைரகுமார், மாநகராட்சி கவுன்சிலர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூரிலும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



Next Story