மதுரை, உசிலம்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


மதுரை, உசிலம்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x

மதுரை, உசிலம்பட்டியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மதுரை

ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை, உசிலம்பட்டியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அத்துமீறி போலீசார் நுழைந்ததை கண்டித்தும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை தல்லாகுளம் தந்தி அலுவலகம் முன்பு காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். மத்திய அரசை கண்டித்தும், டெல்லி போலீசாரை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினா். இதில் கவுன்சிலர்கள் எஸ்.எஸ்.போஸ், எஸ்.வி.முருகன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

உசிலம்பட்டி

மேலும் உசிலம்பட்டி-தேனி ரோடு முருகன் கோவில் முன்பு மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அம்மாபட்டி பாண்டி தலைமையில் நகர தலைவர் உசிலை எம்.மகேந்திரன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் இளங்கோவன், இளைஞரணி சரவணகுமார், மகிளா காங்கிரஸ் தலைவி பிரவீனா, நகர மன்ற துணைத்தலைவர் தேன்மொழி, ஒன்றிய கவுன்சிலர் ரம்யா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story