டெல்லி போலீசாரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
டெல்லி போலீசாரை கண்டித்து கவர்னர் மாளிகை முன்பு இன்று காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் கே.எஸ்.அழகிரி பேட்டி.
சென்னை,
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி நிர்வாகிகள், தொண்டர்களை தாக்கியது கண்டிக்கத்தக்கது. இந்திய ஜனநாயகத்தில் இது ஒரு துக்க நாள். டெல்லி போலீசாரின் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழக கவர்னர் மாளிகை முன்பு 16-ந் தேதி (இன்று) காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். 17-ந் தேதி (நாளை) மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்துடன் எங்களது எதிர்ப்பு நின்று விடாது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story