குளச்சலில் காங்கிரசார் பேரணி; விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
குளச்சலில் காங்கிரசார் பேரணியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்
குளச்சல்,
குளச்சலில் காங்கிரசார் பேரணியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
காங்கிரசார் பேரணி
குமரி மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை ஓராண்டு நிறைவு பேரணி குளச்சல் பீச் சந்திப்பில் நடந்தது. மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் வதனா நிஷா தலைமை தாங்கினார். பேரணியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார். குளச்சல் பீச் சந்திப்பில் தொடங்கிய பேரணி பெரியபள்ளி முக்கு சந்திப்பு, பள்ளிரோடு, பயணியர் விடுதி சந்திப்பு, குளச்சல் அரசு மருத்துமனை வழியாக காமராஜர் பஸ் நிலையம் சென்றடைந்தது. அங்கு விஜய்வசந்த் எம்.பி. பேரணியை முடித்து வைத்து பேசினார். அப்போது அவர், 'வருகிற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி அமோக வெற்றிப்பெற்று பிரதமர் ஆவார். அதற்கு நீங்கள் தொடர்ந்து காங்கிரசை ஆதரிக்க வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் சரோஜா, பனிமேரி, சாந்தி, நித்தியா, மேரி எமல்டா, மரிய ஏஞ்சல், மாவட்ட காங்கிரஸ் மாவட்ட செயல் தலைவர் முனாப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.