நேரு உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை


நேரு உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை
x

நெல்லையில் நேரு உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நேருவின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நடைபெற்ற மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டு நேரு உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, மாவட்ட துணைத்தலைவர்கள் வெள்ளை பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், பேட்டை சுப்பிரமணியன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story