காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்


காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்
x

நெல்லையில் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

டெல்லி மத்திய அமலாக்க துறையினர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கட்சி சார்பில் நேற்று நாடு தழுவிய சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நேற்று அமைதி வழி சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார்.

இந்த போராட்டத்தில் மாவட்ட துணை தலைவர்கள் உதயகுமார், சிவன் பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story