சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்


சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம்
x

சீமான் உருவப்படத்தை எரித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர்

திருநெல்வேலி

நெல்லை:

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கீழநத்தம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசிய, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போத்திராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார். நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் வக்கீல் காமராஜ் ஆகியோர் பேசினர். இதில் வள்ளியூர் யூனியன் துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சீமானின் உருவப்படத்தை தீவைத்து எரித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story