நாகர்கோவிலில் காங்கிரசார் போராட்டம்


நாகர்கோவிலில் காங்கிரசார் போராட்டம்
x

நாகர்கோவிலில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்

ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் சந்திப்பில் நேற்று இரவு திடீர் ஆர்ப்பாட்டம் நடந்தது. அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அலைக்கழிப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நாகர்கோவில் மாநகர் மாவட்ட தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார்.

குமரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் சகாயபிரவீன், வர்த்தக காங்கிரஸ் செயல் தலைவர் ராமசாமி, தவசிமுத்து, மாணவர் காங்கிரஸ் பிரவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

1 More update

Next Story