ஓச்சேரியில் ராஜீவ் ஜோதி யாத்திரைக்கு காங்கிரசார் வரவேற்பு
ஓச்சேரியில் காங்கிரஸ் ஜோதி யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
காவேரிப்பாக்கம்
ஓச்சேரியில் காங்கிரஸ் ஜோதி யாத்திரைக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு அளித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 78-வது பிறந்த நாள் விழா வருகிற 20-ந் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தை சார்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் நேற்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். அதனை தொடர்ந்து மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ராஜீவ் சத்பவண யாத்திரை ஜோதியை அவர்கள் எடுத்தவாறு புறப்பட்டனர். ஓச்சேரி பகுதியில் காவேரிப்பாக்கம் ஒன்றிய தலைவர் செல்வம் தலைமையில் ராஜீவ் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவேரிப்பாக்கம் பஸ் நிலையம் முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன், ஒன்றிய கவுன்சிலர் மாரிமுத்து, பனப்பாக்கம் நகர துணை தலைவர் மயூரநாதன உள்பட பலர் கலந்துகொண்டனர். அதன்பின் வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு வழியாக ஜோதியாத்திரை பெங்களூரை அடைந்து பல்வேறு மாநிலங்கள் வழியாக டெல்லி சென்றடைகின்றது என கட்சியனர் தெரிவித்தனர்.