ராகுல்காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசார் கைது


ராகுல்காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து ரெயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசார் கைது
x

ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மதுரையில் ரெயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை


ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து மதுரையில் ெரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

ரெயில் மறியல்

ராகுல்காந்தி எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்தும், அதை ரத்து செய்யக் கூறியும் மதுரை மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டம் சார்பில் நேற்று காலை கிழக்கு நுழைவுவாயில் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் இதற்காக காங்கிரசார் வந்தனர். முன்னதாகவே அங்கு தடுப்பு கம்பிகளுடன் வாசல் முன்பு போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தடுப்பு கம்பிகளை தாண்டி உள்ளே நுழைய காங்கிரசார் முயன்றனர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, ெரயில் மறியல் செய்ய உள்ளே விடாமல் தடுத்ததையடுத்து, போலீசார் வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் அங்கு அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டபடி சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து போலீசார் வேனில் அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கைது

இந்த ெரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் புறநகர் மாவட்ட தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தல்லாகுளம் முருகன், போஸ், முருகன், ராஜ் பிரதாபன், பொருளாளர் ரவிச்சந்திரன், மாநில பொதுச் செயலாளர் நல்ல மணி, சையது பாபு, மகளிர் அணி நிர்வாகி சானவாஸ்பேகம், நிர்வாகிகள் வக்கீல் ராஜ பிரசாத், பால்ராஜ், கண்ணன், காமராஜ், ராதாகிருஷ்ணன், தளபதி பாலு, ரவிச்சந்திரன், சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் வரதராஜன் தலைமையில் ெரயில் மறியல் போராட்டம் செய்ய வந்தர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 35 பெண்கள் உள்பட மொத்தம் 250 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story