மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் கடைவீதி போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள மாவட்ட தலைமை தபால் அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பொய் வழக்கு போட்டதாக அமலாக்கத்துறையினரை கண்டித்தும், டெல்லி காங்கிரஸ் அலுவலகத்துக்குள் போலீசார் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தி நிர்வாகிகள், தொண்டர்களை தாக்கியதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.


Next Story