வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்


வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
x

குடியாத்தத்தில் வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

வேலூர்

குடியாத்தம், மே.20-

வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வாயில் வெள்ளை துணி கட்டி அறவழி போராட்டம் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். நகரமன்ற உறுப்பினர் விஜயன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் விஜயேந்திரன், வேதமணிமாறன், கோவிந்தராஜ், கோதண்டன் பாரத்நவீன்குமார், சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத் தலைவர் கிருஷ்ணவேணி, முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆடிட்டர் கிருபானந்தம், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் விக்ரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். வட்டார தலைவர்கள் ஜோதி கணேசன், செல்வகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீராங்கன் நன்றி கூறினார்.


Next Story