லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்


லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
x

மல்லசமுத்திரத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே மல்லசமுத்திரத்தில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் தொடங்கியது. விழாவையொட்டி கலச ஆராதனை, நவகிரக ஹோமம், யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story