செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை
சிங்கம்புணரி
சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் பழமை வாய்ந்த செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவில் முன்பு யாகசாலைஅமைக்கப்பட்டு இரண்டு கால பூஜைகள் நடைபெற்றன. கோவில் அர்ச்சகர் லட்சுமணன் அய்யர் மற்றும் சிவகாமரத்தினம், கணேஷ்குமார் பட்டர் குழுவினர் இணைந்து சிறப்பு பூஜைகளை நடத்தினர். அதனை தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு பூஜிக்கப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டது. அதனை தொடர்ந்து திரண்டிருந்த பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story