வரதராஜ பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை


வரதராஜ பெருமாள் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை
x
தினத்தந்தி 30 Sept 2023 5:15 AM IST (Updated: 30 Sept 2023 5:15 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் வரதராஜ பெருமாள் கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரம் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் அண்ணா சாலையில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கொடிமரம் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அதற்கு கவசம் அணிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதல் பல்வேறு ஹோமங்கள், சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் புதிய கொடிமரத்திற்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு கோவில் தலைவரும், முன்னாள் நகராட்சி தலைவருமான வி.எஸ்.கோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் ராஜாராம் பொருளாளர் அங்கப்பன், கமிட்டி உறுப்பினர்கள் ராஜேஷ் கண்ணா, சீனிவாசன், முருகன், கண்ணன், ரமேஷ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story