தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த பெருமண்டல அளவிலான கூட்டம்


தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த பெருமண்டல அளவிலான கூட்டம்
x

தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த பெருமண்டல அளவிலான கூட்டம் நடந்தது.

திருச்சி

மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான ஒருங்கிணைந்த பெருமண்டல அளவிலான கூட்டம், திருச்சி செங்குளம் காலனியில் உள்ள கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன், திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் திவ்யநாதன், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் இணை இயக்குனர் மாலதி மற்றும் திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அனைத்து கடைகள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள் மட்டுமின்றி விவசாயம், பள்ளிகள், கல்லூரிகள், கட்டுமான நிறுவனங்கள், மருத்துவமனைகள், மாநகராட்சி, நகராட்சி, கிராமங்கள், வீட்டு பணியாளர்கள் ஆகிய அனைத்து பணியிடங்களில் பணிபுரியும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்களை https://labour.tn.gov.in/ism என்ற web portal-ல் பதிவு செய்தல் குறித்தும், சட்ட உரிமைகள் குறித்தும் எடுத்து கூறப்பட்டது. மேலும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் பதிவு செய்தல் மூலம் அவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.


Next Story