அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைப்பு


அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைப்பு
x

கோவை அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிட்ரா அருகே ஏறுதளம் அமைக்கும் பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்ட 270 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிட்ரா அருகே ஏறுதளம் அமைக்கும் பணி தொடங்கியது.

மேம்பாலம்

கோவை நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கோவை-திருச்சி ரோடு, அவினாசி ரோடு, மேட்டுப் பாளையம் ரோடு உள்ளிட்ட இடங்களில் மேம்பாலம் கட்டப் பட்டு வருகிறது.

இதில் அவினாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,600 கோடி செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மேம்பாலம் 4 வழிப்பாதையாக அமைக்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 306 தூண்கள் அமைக்கப்பட வேண்டும். இதுவரை 270 கான்கிரீட் தூண்கள் கட்டி முடிக்கப்பட்டு விட்டன. இதுவிர விமானநிலையம் அருகே சிட்ராவில் வாகனங் கள் மேம்பாலத்தில் ஏற வசதியாக ஏறுதளம் அமைக்கப்படுகி றது. இதற்காக அங்கு 6 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு உள்ளன.

நவீன தொழில்நுட்பம்

இது குறித்து நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:-

அவினாசி ரோட்டில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பா லம் கட்டப்படுகிறது. இதில் விமானநிலையம், ஹோப் காலேஜ், நவ இந்தியா, அண்ணாசிலை ஆகிய இடங்களில் 7 மீட்டர் அகலத்தில் ஏறுதளங்கள் மற்றும் இறங்கு தளங்கள் அமைக்கப்படும். இந்த மேம்பாலம் முழுவதும் லாஞ்சர்ஸ் எனப்படும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்படுகிறது.

இதற்காக 2 கான்கிரீட் தூண்களில் அதிக திறன் கொண்ட கிரேன்கள் வைக்கப்பட்டு, கான்கிரீட் தளம் பொருத்தப்படுகிறது. போக்குவரத்துக்கு பாதிப்பு இன்றி மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.

காங்கிரீட் தூண்களுக்கு நடுவே இணைக்கும் வகையில் மொத்தம் 305 கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். இதுவரை 20 தளங்கள் போடப்பட்டு உள்ளது. இதுதவிர 5 இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story