ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி


ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி
x
தினத்தந்தி 16 July 2023 12:30 AM IST (Updated: 16 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வீரகேரளத்தில் ரூ.1 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி

கோயம்புத்தூர்


வடவள்ளி


கோவையை அடுத்த வடவள்ளி மருதமலை ரோடு தேவஸ்தான பள்ளியின் எதிர்புறம் உள்ள சாலை வழியாக சென்றால் வீரகேர ளத்தை சென்று அடையலாம்.

இந்த சாலையில் மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகே பாலம் உள்ளது. அந்த பாலத்தின் வழியாக பேரூர், வேடப்பட்டி, ஆர்.எஸ்.புரம் போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியும்.


எனவே அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பாலம் வழியாக சென்று வந்தனர். ஆனால் அந்த பாலம் மிகவும் குறுகலாக இருந்ததால் வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டு வந்தனர்.


எனவே அங்குள்ள பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் கட்டுவதற்கு முடிவு செய்தனர்.

அதைதொடர்ந்து அங்கிருந்த குறுகிய பாலம் இடித்து அகற்றப் பட்டது. அதன்பிறகு ரூ.1 கோடி மதிப்பில் 15 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளத்தில் புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியது. இதற்காக அங்கு குழி தோண்டப்பட்டு காங்கிரீட் கம்பி மற்றும் கலவை போடப்பட்டு வருகிறது.


இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், புதிய பாலம் கட்டும் பணி தற்போது தொடங்கி உள்ளது. 7 மீட்டரில் இருந்து 15 மீட்டராக பாலம் அகலப்படுத்தப்படுகிறது.

இன்னும் 2½ மாதங்களில் பாலம் கட்டும் பணி நிறைவடையும். அதுவரை மக்கள் மாற்றுப்பாதை வழியாகவும், சீரநாயக்கன்பாளையம் வழியாகவும் வீரகேரளத்தை சென்று அடையலாம். இதனால் வாகன ஓட்டிகள் நெரிசல் இன்றி செல்ல முடியும் என்றனர்.



Next Story