சோலையாறு அணையில் ரூ.1½ கோடியில் பூங்கா அமைக்கும் பணி


தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே சோலையாறு அணையில் ரூ.1½ கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை, மார்ச்.8-

வால்பாறை அருகே சோலையாறு அணையில் ரூ.1½ கோடியில் பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சோலையாறு அணை

வால்பாறை பகுதியில் பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டத்தின் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. மேலும் சோலையாறு ஆற்றை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்ட சோலையாறு அணை 1972 -ம் ஆண்டு திறக்கப்பட்டது.

அப்போது சோலையாறு அணையை பார்த்து ரசித்து விளை யாட அணையின் கீழ் பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டது. அதில் சுற்றுலா பயணிகள் ஓய்வெடுக்கும் அறை, நீரூற்றுகள், குழந்தைகள் விளையாட சறுக்கு, ஊஞ்சல் போன்ற சாதனங்கள் அமைக்கப்பட்டன. இதனால் வால்பாறையில் கடந்த 1972-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டு வரை சோலையார் அணை சிறந்த சுற்றுலா தலமாக திகழ்ந்தது.

பராமரிப்பின்றி கிடந்தது

அதன்பிறகு சோலையாறு அணை பூங்கா கடந்த 35 ஆண்டுக ளாக பராமரிப்பு இன்றி கிடந்தது. இதனால் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு கூட இடம் இல்லாத நிலை உள்ளது. எனவே அவர்கள் நின்றபடி சாப்பிட்டு விட்டு செல் கின்றனர்.

வால்பாறையில் சுற்றுலா தலங்கள் பராமரிப்பு இன்றி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டது. மேலும் சுற்றுலாவை நம்பி இருந்த சார்பு தொழில்கள் பாதிக்கப்பட்டது.

ரூ.1½ கோடி ஒதுக்கீடு

எனவே சோலையார் அணை பூங்கா உள்பட சுற்றுலா தலங்க ளை பராமரித்து மேம்படுத்த வேண்டும் என்று வால்பாறை பகுதி வியாபாரிகள், சுற்றுலா சார்ந்த தொழில் துறையினர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து சோலையாறு அணையை பராமரிக்கும் பணிக்காக ரூ.106 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் சோலையாறு அணை பூங்கா மேம்படுத்தப்படுகிறது. அதன்படி அங்கு ஏற்கனவே அமைக்கப் பட்டு இருந்த ஓய்வு அறை, விளையாட்டு உபகரணங்கள், நீரூற்று களை புதுப்பிக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள் மகிழ்ச்சி

மேலும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், சுற்றுலா பயணிகள் உட்கார இருக்கைகள் மற்றும் புல்தரைகள் அமைக்கும் பணியை பொதுப் பணித்துறை அதிகாரிகள் பார்வை யிட்டு முழுவீச்சில் செய்து வருகின்றனர்.

சோலையார் அணை பூங்கா சீரமைக்கப்பட்டு வருவதால் வால்பாறை பகுதி மக்கள் மற்றும் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் அந்த பணிகளை விரைவாக முடித்து பயன்பாட்டுக்கு திறந்து விட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

1 More update

Next Story