கீழ்வீதி கிராமத்தில் ரூ.31 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும்பணி
கீழ்வீதி கிராமத்தில் ரூ.31 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும்பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
நெமிலி
கீழ்வீதி கிராமத்தில் ரூ.31 லட்சத்தில் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டும்பணியை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதி திராவிட தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு இப்பள்ளியின் கட்டிடம் பழுதடைந்துள்ளதாக கூறி இடித்து அப்புறப்படுத்தினர். பின்பு வகுப்பறை கட்டிடம் இல்லாததால் கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் பள்ளி கட்டிடம் கட்டக்கோரி பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் நெமிலி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நெமிலி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு 2 வகுப்பறைகள் கட்ட ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.31 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி இரண்டு வகுப்பறை கொண்ட பள்ளிக்கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராமன், பாஸ்கர், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி. பெருமாள், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம், ஒன்றிய கவுன்சிலர் மணிமேகலை வெங்கடேசன், பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.