மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.31 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்


மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு  ரூ.31 கோடியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி தொடக்கம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்
x
தினத்தந்தி 14 Sept 2023 6:30 AM IST (Updated: 14 Sept 2023 6:31 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் ரூ.31 கோடியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் ரூ.31 கோடியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தாலுகா தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு காரணங்களால் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காத நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் ஊட்டியில் மருத்துவக் கல்லூரி தொடங்கியதால் அங்கு செயல்பட்டு வரும் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை கூடலூரில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைக்கப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி அமைப்பதற்கு ரூ.31 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு தேவையான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை நேற்று தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது.

அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

இதைத்தொடர்ந்து பூமி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் காலை 11 மணிக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா, துணை இயக்குனர் பாலுசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாசாமி, கூடலூர் தலைமை மருத்துவர் சுரேஷ், நகராட்சி தலைவர் பரிமளா, ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மருத்துவ இணை இயக்குனர் பழனிச்சாமி நன்றி கூறினார்.


Next Story