ரூ.11 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி


ரூ.11 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி
x

ஆரணி நகராட்சி 25-வது வார்டில் ரூ.11 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி நகராட்சி 25-வது வார்டு விநாயகர் கோவில் தெருவில் நகரசபை உறுப்பினர் சுப்பிரமணி தனது சொந்த நிதியின் மூலம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் காசோலையை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி மூலமாக மாவட்ட கலெக்டருக்கு வழங்கினார்.

இதையடுத்து நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.11 லட்சம் நிதி வரப்பட்டது.

அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் புதிதாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடந்தது.

இந்த பணியினை நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகராட்சி உதவி பொறியாளர், நகரமன்ற உறுப்பினர் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story