15 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் சமுதாயக்கூட கட்டுமான பணி


15 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் சமுதாயக்கூட கட்டுமான பணி
x

தென்கோவனூரில் 15 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் சமுதாயக்கூட கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

தென்கோவனூரில் 15 ஆண்டுகளாக பாதியில் நிற்கும் சமுதாயக்கூட கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கப்படுமா? என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமுதாயக்கூடம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள தென்கோவனூரில், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், திருமணம், காதணி விழா நடத்துவதற்கும் மற்றும் அரசு சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும் ஏற்ப, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாய கூட கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.

ஆனால், விறு விறுப்பாக நடைபெற்ற அந்த கட்டுமான பணிகள் 4 பக்கமும் சுவர்கள் எழுப்பியதோடு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் பிறகு கட்டுமான பணிகள் இன்று வரை தொடங்கப்படாமல் உள்ளது.

15 ஆண்டுகளுக்கு மேலாகியும்...

தற்போது கட்டுமான பணிகள் முழுமை அடையாமல் பாதியில் நிற்கும் கட்டிடத்தை சுற்றிலும் அடர்ந்த காடுகள் போல புதர் மண்டி கிடக்கிறது. மேலும், இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.

மக்கள் பயன்பாட்டிற்காக கட்ட தொடங்கிய ஒரு சமுதாயக்கூட கட்டிடம் 15 ஆண்டுகளுக்கும் மேலாகியும், கட்டி முடிக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகவும் வேதனை தெரிவிக்கின்றனர். கட்டுமான பணிகள் இனியும் தொடங்காவிட்டால், இருக்கிற 4 பக்க சுவர்களும் வலுவிழந்து இடிந்து விழும் நிலை ஏற்படும்.

மக்கள் பயன்பாட்டிற்கு

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டிடத்தை பார்வையிட்டு, கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்கி, பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story