புதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி


புதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 10 Oct 2023 6:45 PM GMT (Updated: 10 Oct 2023 6:45 PM GMT)

கொள்ளிடம் அருகே புதுமண்ணி ஆற்றில் வலுவிழந்த கரைகளில் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

தடுப்புச்சுவர் அமைக்கும் பணி

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நீர்வளத் துறையின் விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ்புதுமண்ணியாற்றில் உள்ள அனைத்து மதகுகளும், நீர் ஒழுங்கிகளும் சரி செய்யப்பட்டு வருகிறது. பழைய பாளையம் கிராமத்தில் உள்ள நீர் குமிழிகள், தலைப்பு மதகுகள் பிரிவு வாய்க்காலில் உள்ள தடுப்பு கட்டைகள், மற்றும் வடிகால் மதகுகள் ஆகியவை அனைத்தும் செயல்பட்டு வருகிறது.

மாதானம், கொப்பியம், பழையபாளையம் ஆகிய கிராமங்களில் புதுமண்ணி ஆற்றின் இரு கரைகளிலும் தடுப்புச்சுவர் கட்டும் பணி முடிவுறும் நிலையில இருந்து வருகிறது. மேலும் இந்த கிராமங்களில் ஆங்காங்கே வெள்ள காலங்களில் கரை உடைப்பு ஏற்படும் இடங்களில் தடுப்புச் சுவரும் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுகுறித்து கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமத்தை சேர்ந்த புதுமண்ணியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கோதண்டராமன் கூறுகையில், நீர்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளால் கடைமடை பகுதியில் விவசாய நிலங்கள் நல்ல முறையில் பாசன வசதி பெறுவதுடன் வெள்ள காலங்களில் ஏற்படும் பாதிப்புகளும் குறையும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். கடைமடை பகுதியில் புதுமண்ணியாற்றில் மழை வெள்ள காலங்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படும் பகுதிகளில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இந்த பணியினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் மழைக்காலங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்வீணாகாத நிலையில் பாதுகாக்கப்படும். கடைமடை பகுதியில் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மகாபாரதி, மயிலாடுதுறை வடிநில கோட்ட உதவிபொறியாளர் சண்முகம் மற்றும் பொறியாளர் அனைவருக்கும் விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.


Next Story