ரூ.15 லட்சத்தில் குடிநீர் பைப் அமைக்கும் பணி
ஆலங்காயம் அருகே ரூ.15 லட்சத்தில் குடிநீர் பைப் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட தீர்த்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் மின்மோட்டார், குடிநீர் பைப்லைன் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அப்பகுதி மக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் ஆலங்காயம் பேரூராட்சி செயலாளர் சிவக்குமார், முன்னாள் செயலாளர் பாண்டியன், துணை செயலாளர் ஆர்.கே.சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story