ஜோலார்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி


ஜோலார்பேட்டையில் ரூ.10 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
x

ரூ.10 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

ரூ.10 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.

ஜோலார்பேட்டை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 6-வது வார்டு குடியானகுப்பம் ரெயில்வே கேட்டை கடக்கும் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் குடிநீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இது குறித்து வார்டு கவுன்சிலர் ஜி.சக்கரவர்த்தி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.செயலாளரான ஜோலார்பேட்டை க.தேவராஜி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

இந்்த நிலையில் ஜோலார்பேட்டை நகர மன்ற கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரெயில்வே கேட்டை கடந்துள்ள பொதுமக்களுக்கு நிரந்தரமாக காவிரி கூட்டு குடிநீர் வழங்குவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கான பூமி பூஜையில் நகர மன்ற தலைவர் எம்.காவியா விக்டர் கலந்துகொண்டு பணிகளை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க.நகர செயலாளர் ம.அன்பழகன், நகராட்சி ஆணையர் ஜி.பழனி, முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், நகராட்சி பொறியாளர் சங்கர், வார்டு கவுன்சிலர் ஜி.சக்கரவர்த்தி, பணி மேற்பார்வையாளர் வினோத் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story