குடிநீர் தொட்டி அமைக்கும் பணி


குடிநீர் தொட்டி அமைக்கும் பணி
x

குடிநீர் தொட்டி அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பேரூராட்சியில் ஆங்காங்கே 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டிருந்த சின்டெக்ஸ் தொட்டி சேதமானது. இதனால் பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் குடிதண்ணீர் தொட்டி அமைத்து தர வேண்டுமென பேரூராட்சி தலைவர் செந்திலிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கள்ளிக்குடி சாலையில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அமலா பள்ளி, பள்ளத்துப்பட்டி, முக்குரோடு மற்றும் செவல்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுத்து குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story