பண்ணை குட்டை அமைக்கும் பணி


பண்ணை குட்டை அமைக்கும் பணி
x

விருத்தாசலம் அருகே பண்ணை குட்டை அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

கடலூர்

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் ஊராட்சியில் நீர் மேலாண்மை இயக்க திட்டத்தின் கீழ் தனிநபர் உறிஞ்சுழி, அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு, பண்ணை குட்டை அமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சென்னை ஜல் சக்தி அபியான் திட்ட இயக்குனர் சுபாஷ்சன் சாரு மற்றும் திட்ட நிபுணர் சுனிதா ஜத்வா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணிகளின் தரம் குறித்து அவர்கள் சோதனை செய்து பார்த்தனர். தொடர்ந்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு அவர்கள் உத்தரவிட்டனர். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் தணிகாசலம், உதவி செயற்பொறியாளர்கள் யாசின், நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி, உதவிபொறியாளர் கார்த்திக், பணி மேற்பார்வையாளர் ஆரோக்கிய விமலா மேரி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வீரம்மாள் பழனிசாமி, ஊராட்சி செயலாளர் ராஜலட்சுமி உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story