ரூ.4½ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி


ரூ.4½ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி
x
தினத்தந்தி 29 Aug 2023 7:15 PM GMT (Updated: 29 Aug 2023 7:15 PM GMT)

கோத்தகிரியில் அரசு ஊழியர்களுக்கு ரூ.4½ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் அரசு ஊழியர்களுக்கு ரூ.4½ கோடியில் குடியிருப்புகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நிதி ஒதுக்கீடு

கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு குடியிருப்புகள் இருந்தன. பழமையான அந்த குடியிருப்புகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.

பின்னர் அதே பகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்களும், கோத்தகிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் (தாசில்தார் குடியிருப்பு உள்பட) என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை சார்பில், ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

16 குடியிருப்புகள்

இதைத்தொடர்ந்து கோத்தகிரி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இருந்த பழைய குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் 10 அடி ஆழத்திற்கு மண் அகற்றப்பட்டு, அங்கு அஸ்திவார கான்கிரீட் போடப்பட்டு, செம்மண்ணுடன் எம்.சண்டை தண்ணீருடன் கலந்து கொட்டி தரைத்தளத்தைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.

இதையடுத்து கட்டிடம் கட்டுவதற்கு வசதியாக கான்கிரீட் தூண்கள் அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதே போல கோத்தகிரி சக்தி மலை பகுதியில் 8 அரசு குடியிருப்புகள் கட்ட ஒதுக்கப்பட்டு உள்ள நிலத்தை சமன் செய்யும் பணிகள் நிறைவு பெற்று உள்ளது. முதல்கட்டமாக அரசு மேல்நிலைப் பள்ளி அருகே 8 வீடுகள் விரைந்து கட்டி முடிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக சக்தி மலை பகுதியிலும் 8 வீடுகள் கட்டும் பணி நடைபெறும் என பொதுப்பணித்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.


Next Story