சுகாதார நிலையம் கட்டும் பணி


சுகாதார நிலையம் கட்டும் பணி
x
தினத்தந்தி 22 Sept 2023 4:45 AM IST (Updated: 22 Sept 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தில் சுகாதார நிலையம் கட்டும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

தேனி

பெரியகுளம் அருகே கீழவடகரை ஊராட்சியில் உள்ள அழகர்சாமிபுரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் சுகாதார நிலைய பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாக, விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, ஊராட்சி தலைவர் செல்வராணி செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன், விஜய் மாலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம், ஒன்றிய பொறியாளர் சேகர், ஊராட்சி செயலாளர் ஜெயபாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story