ரூ.3¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் பணி
ரூ.3¾ கோடியில் இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியில் இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 கோடியே 80 லட்சத்தில் 76 வீடுகள் கட்டப்பட்ட உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஹால், படுக்கையறை, சமையலறை, கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. மொத்தம் 22,800 சதுர அடி பரப்பளவில் இந்த வீடுகள் கட்டப்பட உள்ளது.
வீடுகள் கட்டுமான பணிகள் தொடங்கியது. கலெக்டர் அமர் குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜி, வில்வநாதன் ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தனர். இப்பணிகள் 9 மாதத்திற்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நிகழ்ச்சியில் மாதனூர் ஒன்றியக் குழு தலைவர் சுரேஷ்குமார், துணைத் தலைவர் சாந்தி சீனிவாசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கலீல் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.