திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி கேலரி அமைக்கும் பணி


திசையன்விளையில் மின்னொளி கபடி போட்டி கேலரி அமைக்கும் பணி
x

திசையன்விளையில் அகில இந்திய மின்னொளி கபடி போட்டி கேலரி அமைக்கும் பணியை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 13-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை 4 நாட்கள் நடக்கிறது. போட்டியை 15 ஆயிரம் பேர் இலவசமாக அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்ட கேலரி வசதி அமைக்கப்பட உள்ளது. அதற்கான தொடக்கவிழா நேற்று காலை நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், திட்டக்குழு தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கி கேலரி அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள அகில இந்திய அளவிலான கபடி போட்டியில் 60 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகிறது. முன்னதாக திசையன்விளை காமராஜர் சிலை முன்பு இருந்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடக்கிறது. போட்டி நடைபெறும் நாட்களில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள்" என்றார். விழாவில் அப்புவிளை பஞ்சாயத்து முன்னாள் தலைவர் வி.எஸ்.ஆர்.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story