வணிக வளாகம் கட்டும் பணி தாமதம்
சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.6 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தாமதமாக நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் போதிய இடம் இன்றி பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
சிவகாசி,
சிவகாசி பஸ் நிலையத்தில் ரூ.6 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தாமதமாக நடந்து வரும் நிலையில் பஸ் நிலையத்தில் போதிய இடம் இன்றி பயணிகள் அவதி அடைந்து வருகிறார்கள்.
பஸ்நிலையம்
சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வருகிறது. போதிய இடவசதி இன்றி திணறி வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதையை நகராட்சி நிர்வாகம் அருகில் இருந்த இடத்தை பஸ் நிலைய விரிவாகம் செய்ய வாங்கியது.
பின்னர் அங்கு பஸ் நிலைய விரிவாகம் செய்து பஸ்களை நிறுத்த முடிவு செய்த நிலையில் நகராட்சிக்கு தொடர்ந்து வருவாய் கிடைக்கும் வகையில் 8 கடைகள் கட்டப்பட்டன. இந்த கடைகள் தற்போது வரை ஏலம் போகவில்லை.
வணிக வளாகம்
இந்தநிலையில் பஸ் நிலையத்தின் முன்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் புதிய வணிக வளாகம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. பணிகள் தொடங்கி 6 மாதம் ஆகிறது. ஆனாலும் 50 சதவீதம் பணிகள் கூட முடியாமல் இருக்கிறது.
இதனால் பஸ்கள் நிறுத்த போதிய இடம் இன்றி பஸ்கள் வெளியேறும் பகுதியில் நிறுத்தப்படுகிறது. இதனால் தினமும் பஸ் நிலையத்தில் செயற்கையாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நடவடிக்கை
பஸ் நிலையத்தில் கட்டப்படும் வணிக வளாகம் ஆமை வேகத்தில் கட்டப்பட்டு வருவதால் பயணிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் கட்டிட பணிகளை தரமாக விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரை மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கட்டுமான பணிகள் விரைந்து முடிந்தால் தான் அங்கு அமைக்கப்பட்டிருக்கும் டெண்டுகள் அகற்றப்பட்டு பஸ்களை நிறுத்த போதிய இடவசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தை உடனே ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.