ரூ.42 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி


ரூ.42 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி
x

ரூ.42 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் சேதமடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால் அலுவலகம் செயல்பட போதுமான இடவசதி இல்லாமல் இருப்பதாக ஊராட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் இந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி பக்கிரிசாமி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் ஜெயந்தி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். இதில் திருமருகல் வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்டுவன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஜெயபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story