நெல்லையில் புதிய சாலை அமைக்கும் பணி
நெல்லையில் புதிய சாலை அமைக்கும் பணியை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல பகுதிக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் இருந்து கைலாசபுரம் பள்ளிவாசல் வரை பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி மற்றும் புதிய தார் சாலை அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் ரேவதி பிரபு, உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் லெனின், சுகாதார ஆய்வாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story