புதிய சாலை அமைக்கும் பணி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


புதிய சாலை அமைக்கும் பணி; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

வடக்கு விஜயநாராயணத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

தமிழக முதல்-அமைச்சரின் பங்களிப்பு திட்டத்தில் ரெட்டியார்பட்டி- விஜயநாராயணம் இடையே புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா, வடக்கு விஜயநாராயணத்தில் நேற்று நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார்.

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு, காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, வட்டார தலைவர் ராமஜெயம் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக கிணற்றில் விழுந்த விலங்குகளை மீட்பதற்காக வலை வேண்டும் என்று நாங்குநேரி தீயணைப்பு நிலையம் சார்பில், ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.விடம் என்று கோரிக்கை வைத்தார்கள். இதனை ஏற்று ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் வலையை வாங்கி கொடுத்தார்.

பின்னர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி அருகே பட்டர்புரம் சந்தன மாரியம்மன் கோவில் கொடை விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அங்கு இருந்த கலைஞர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.


Next Story