ரூ.18 கோடியில் புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணி


ரூ.18 கோடியில் புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணி
x

திருப்பாற்கடல் பகுதியில் ரூ.18 கோடியில் புதிய பள்ளிகட்டிடங்கள் கட்டும் பணியை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கிவைத்தார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அடுத்த திருப்பாற்கடல் திருப்பாற்கடல், வி.கே.மாங்காடு, ஆற்காடு, திமிரி, கலவை, ஒழுகூர், பனப்பாக்கம், புலிவலம், மகேந்திரவாடி, ரெண்டாடி, சோளிங்கர் உள்ளிட்ட 11 பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக கட்டிடவசதி இல்லாமல் மாணவ-மாணவிகள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனால் இந்த பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்துவந்தனர்.

அதன்படி நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடியே 23 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பாற்கடல் தேவராஜ் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்டும் பணியை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு பள்ளிக்கட்டிடம் கட்டும் பணியை பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தார்.

இதில் கலெக்டர் வளர்மதி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன், ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ஓச்சேரி பாலாஜி, தெய்வசிகாமணி, மாவட்ட கவுன்சிலர்கள் மாலதி கணேசன், சக்தி, ஒன்றிய கவுன்சிலர் இந்திராணி சுந்தரம், மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


Next Story