புதிய தார் சாலை அமைக்கும் பணி


புதிய தார் சாலை அமைக்கும் பணி
x

கோபாலசமுத்திரத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் நகர்ப்புற சாலை கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைத்தல், சிமெண்டு சாலை அமைத்தல் பணி, மாநில நிதி ஆணையம் திட்டத்தின் கீழ் தார்சாலை அமைத்தல் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் தமயந்தி பழனி தலைமை தாங்கி, பணிகளை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி, பேரூராட்சி துணைத்தலைவர் சுந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி பொறியாளர் சேதுராமலிங்கம் மற்றும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story