ரூ.8 லட்சத்தில் நெற்களம் அமைக்கும் பணி


ரூ.8 லட்சத்தில் நெற்களம் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-10T00:16:39+05:30)

கடையம் அருகே, ரூ.8 லட்சத்தில் நெற்களம் அமைக்கும் பணிக்கு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்

தென்காசி

கடையம் யூனியன் மந்தியூர் மெயின்ரோடு பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய நெற்களம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ்பாண்டியன் தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், மந்தியூர் பஞ்சாயத்து தலைவர் கல்யாண சுந்தரம், தலைமை கழக செய்தி தொடர்பாளர் கண்ணன், அமைப்புச்செயலாளர் ராதா, தொழிற்சங்க மாநில செயலாளர் சேர்மத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story