நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது


நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது
x

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது.

நாமக்கல்

நாமக்கல் மலைக்கோட்டையின் கிழக்குப்புறத்தில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கி.பி. 8-ம் நூற்றாண்டில் மன்னர் அதியேந்திர குணசீலனால் கட்டப்பட்ட குடவறை கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதையொட்டி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியும் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு வருகிற 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. அதை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் வகையில் கோவில் படிவாசல் மற்றும் வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியது. இதில் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மூங்கில் கம்புகள் மற்றும் இரும்பு தகரங்களை கொண்டு பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story