காவல் சோதனை சாவடி அமைக்கும் பணி தொடக்கம்


காவல் சோதனை சாவடி அமைக்கும் பணி தொடக்கம்
x

பனப்பாக்கத்தில் காவல் சோதனை சாவடி அமைக்கும் பணி தொடங்கியது.

ராணிப்பேட்டை

நெமிலி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பனப்பாக்கம் வழியாக 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரி, தனியார் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு சென்றுவருகின்றனர். இரவு நேரங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் போது வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் அதிகம் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பனப்பாக்கம் பகுதியில் உள்ள மும்முனை சந்திப்பில் காவல் சோதனை சாவடி அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

அதன்பேரில் காவல் சோதனை சாவடி அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பனப்பாக்கம் பேரூராட்சி மன்ற தலைவர் கவிதா தலைமை தாங்கினார். பாணாவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி, நகர தி.மு.க. செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக உதவி போலீஸ் சூப்பிரண்டு யாதவ் கிரிஷ் அசோக் கலந்துகொண்டு காவல் சோதனை சாவடிக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார். இதில் சப்- இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story