ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி


ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி
x
தினத்தந்தி 18 Oct 2023 6:45 PM GMT (Updated: 18 Oct 2023 6:47 PM GMT)

கீழ்ப்பாடியில் ரூ.1 கோடியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணியை வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்ப்பாடியில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பூமிபூஜை செய்து பணியை தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அசோக்குமார், ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் கோவிந்தராஜி, அமிர்தம் ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் ஜீவரேகா அண்ணாமலை, பொதுக்குழு உறுப்பினர் ராஜி, ஊராட்சிமன்ற தலைவர்கள் பழனியம்மாள், கிருஷ்ணபிரசாத், ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் சிவசுப்ரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story