மழைநீர் வடிகால் அமைக்கும் பணி
நாகூரில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை முகமது ஷா நவாஸ் எம்.எல்.எ. ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்
வெளிப்பாளையம்:
நாகூரில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க திட்டத்தின் கீழ், ரூ.80 லட்சத்தில் சத்திரம் கட்டிடப் பணி நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட பணிகளை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நாகூர் பீரோடும் தெருவில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் மழைநீர் வடிகால் மற்றும் தார்ச்சாலை அமைக்கும் பணியினையும், நாகூர் வள்ளியம்மை நகரில் நிறைவடைந்துள்ள சிமெண்டு சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இ்ந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையர் ஸ்ரீதேவி மற்றும் பொறியாளர் ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
Related Tags :
Next Story