தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடக்கம்


தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 19 Sept 2023 3:45 AM IST (Updated: 19 Sept 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக, முதலில் வளாகத்தில் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

நீலகிரி

கூடலூர்

கூடலூரில் உள்ள மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக, முதலில் வளாகத்தில் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

ரூ.31 கோடி ஒதுக்கீடு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி இருந்த நிலையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு உள்ளது. இதனால் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியை கூடலூருக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கூடலூரில் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி தொடங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் ரூ.31 கோடி நிதி ஒதுக்கியது. இந்தநிலையில் கடந்த வாரம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி

இதையடுத்து கூடலூர் ஆஸ்பத்திரி வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்காக மேடான பகுதியில் தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கட்டிடங்கள் கட்டுவதற்கு வசதியாக பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலத்தை சமன்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் நீண்ட கால கோரிக்கைக்கு தீர்வு கிடைக்க உள்ளதாக கூடலூர், பந்தலூர் தாலுகா மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கூடலூர் தாலுகா அரசு ஆஸ்பத்திரி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு உள்ளது. அதற்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதில் 52,541 சதுர அடி பரப்பளவில் 200 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டிடங்கள் பொதுப்பணித்துறை மூலம் கட்டப்பட உள்ளது. அதற்காக முதல் கட்டமாக தடுப்புச்சுவர்கள் கட்டும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story