வேளியூர், படுநெல்லி ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி


வேளியூர், படுநெல்லி ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி
x

படுநெல்லி ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணிகளை எம்.எல்.ஏ. எழிலரசன் தொடங்கிவைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளியூர் ஊராட்சியில் பழுதடைந்த பள்ளி கட்டிடத்தையும், படுநெல்லி ஊராட்சியில் சேதம் அடைந்த நிலையில் இருந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தையும் இடித்துவிட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று கிராம மக்கள் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசனிடம் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வேளியூர் ஊராட்சியில் ரூ.21 லட்சம் நிதியில் பள்ளி கட்டிடமும், படுநெல்லி ஊராட்சியில் ரூ.12 லட்சம் செலவில் அங்கன்வாடி மைய கட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார். அதன்படி வேளியூர், படுநெல்லி ஊராட்சிகளில் பள்ளி கட்டிடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் காஞ்சீபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்துகொண்டு அடிக்கல்லை நட்டு வைத்து கட்டிடம் கட்டும் பணிகளை தொடங்கிவைத்தார். இதில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் படுநெல்லி பி.எம்.பாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் வேண்டாமிருதம் வேதாச்சலம், சுனிதா பாபு, லோகு தாஸ், படுநெல்லி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வேளியூர் சிவகாமி ஜோதி, படுநெல்லி வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் பழனி, வெங்கட்ராமன், கவிதா டில்லி பாபு, ஆறுமுகம், பார்த்திபன், திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story